வவுனியா போக்குவரத்து பிரிவிற்கு பொலிஸ் பொறுப்பதிகாரி நியமனம்

Report Print Theesan in பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு வெற்றிடமாக காணப்படும் பகுதிகளிற்கு பதவிகள் வழங்கப்பட்டு வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய காமினி திஸாநாயக்க போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பதவியுயர்வு பெற்று இன்று 10.01 என்ற சுப நேரத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

வவுனியா மாவட்டத்தில் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய அசோக பிரியந்த கடந்த மாதம் குருணாகல் பகுதிக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...