ஈரானின் கடும் எச்சரிக்கை! டுபாயிலுள்ள இலங்கையர்களுக்கு ஆபத்து

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் மூன்றாம் உலகப் போருக்கான ஆரம்ப புள்ளியாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தம் நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அவர்களின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கில் செல்வாக்கு மிகுந்த பிராந்தியமான டுபாய் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

தொழில்வாய்ப்புக்காக சுமார் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் டுபாயில் பணி புரிந்து வருகின்றர். இந்நிலையில் ஈரானின் எச்சரிக்கை பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஈரான் தம் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் எச்சரித்துள்ளார்.

Latest Offers

loading...