கடுமையாக திட்டித் தீர்த்த ஜனாதிபதி கோட்டாபய! ஏமாற்றத்துடன் வெளியேறிய அமைச்சர்கள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையுடன் ஜனாதிபதியை சந்திக்க சென்ற அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, கடுமையாக திட்டி வெளியேற்றியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியை சந்திப்பதற்காக சென்றுள்ளனர்.

அங்கு துமிந்த சில்வாவை விடுவிக்குமாறு குறிதத் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஞ்சன் ராமநாயக்கவின் உரையாடல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலையை பயன்படுத்தி துமிந்தவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த யோசனையால் கோபமடைந்த ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் தான் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் போதுமானதாகும், இல்லாத பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள எனக்கு எந்த அவசியமும் இல்லை என ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.