176 பயணிகளுடன் சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்தியமையை ஏற்றுக்கொண்ட ஈரான்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை தவறுதலாக நடந்த அனர்த்தம் என ஈரான் அறிவித்துள்ளது.

மனிதத் தவறு காரணமாக உக்ரேனிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரானிய இராணுவத்தை மேற்கொள் காட்டி, அந்நாட்டு அரச தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

விமானம் இராணுவ முகாமிற்கு மிகவும் அண்மித்து பறந்துள்ளதால் சந்தேகத்தின் பேரில் இவ்வாறு தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 176 பயணிகளுடன் சென்ற உக்ரேனிய விமானமொன்று ஈரானில் வைத்து விபத்துக்குள்ளாகியிருந்தது. அதில் பயணித்த அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக முன்னர் சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...