மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடியால் இலங்கையில் எண்ணெய் விலை அதிகரிக்குமா?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பலன்தோட்டையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு நேற்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் உள்ளது. அத்துடன் விலை அதிகரிப்புகளை மேற்கொள்வதற்கும் தீர்மானங்கள் இல்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

எனினும் அவ்வாறான குழப்ப நிலைமை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...