யாழில் தேடுதல் வேட்டையில் களமிறங்கிய இராணுவத்தினர்

Report Print Sumi in பாதுகாப்பு

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து இன்றைய தினம் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் காலை 5.30 மணி முதல் காலை 6 மணி வரை இந்த சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரியவருகிறது.

பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஒத்துழைப்புடன் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...