இரண்டு சடலங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

தாய்லாந்து எயார் லைன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

ஜெடாயிலிருந்து இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையம் நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் இரண்டு பயணிகள் சுகயீனமடைந்துள்ளமையினால் அவசரமாக தரையிறக்க அனுமதியளிக்குமாறு விமானி கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைய இன்று அதிகாலை 2.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறங்கியுள்ளது.

எனினும் விமானத்தில் சுகயீனமடைந்ததாக கூறப்படும் இரண்டு நபர்களும் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷிய பெண் மற்றும் ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தாய்லாந்து விமான நிலையத்திற்கு சொந்தமான இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.