சர்ச்சைக்குரிய நபராக மாறிய ரஞ்சன் ராமநாயக்க! சிறைச்சாலையில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனக்கு மெத்தை ஒன்றை வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெகசின் சிறைச்சாலையின் பீ அறையில் ரஞ்சன் ராமநாயக்க தற்போது வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அந்த அறையில் மேலும் 4 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எனினும் மாலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரை அந்த அறைகளில் இருந்து தனித்தனி அறைகளில் குறித்த கைதிகள் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறைச்சாலை சட்டத்திற்கமைய சிறைச்சாலை அதிகாரகளிடம் கைதிகளின் கோரிக்கைக்கமைய மெத்தை வழங்க முடியாதென தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியர் பரிந்துரை செய்தால் மாத்திரமே அவருக்கு மெத்தை வழங்க முடியும். எனினும் வைத்திய பரிசோதனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தமையினால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் வெளிவந்துள்ளமையினால் பலத்த சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...