கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மாபியா கும்பல்! அதிரடி படையினர் நடவடிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் நுழைவாயிலுக்கு அருகில் வைத்து 9 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளுக்கு அவசியமற்ற அழுத்தம் மேற்கொண்ட 9 பேரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்குள் 31 - 68 வயதுடையவர்கள் என குறிப்பிடப்படுகின்றனர்.

அவர்களில் மினுவாங்கொட, நீர்கொழும்பு, ஹத்தரலியத்த, வலஸ்முல்ல மற்றும் காலி ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பிரிவின் கட்டளை அதிகாரியின் ஆலோசனைக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெறும் வாடகை வாகன மாபியா தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.