கட்டுநாயக்க விமான நிலையத்தில் தயார் நிலையில் சுகாதார அதிகாரிகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் நோய்த் தொற்று காரணமாக தீவிரமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தொற்று நோய் பிரிவின் தலைமை தொற்றுநோய் நிபுணர் சுதன் சமரவீர தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சுகாதார கூடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் வைத்தியர் சமரவீர தெரிவித்துள்ளார்

எப்படியிருப்பினும் இந்த காய்ச்சல் பரவுவதன் காரணமாக விமான பயணங்களை மட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என உலக சுகாதார பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

அனைத்து பயணிகளையும் சுகாதாரத்தை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருமல் வரும் போது கைக்குட்டையில் முகத்தை மூடிக் கொள்ளுமாறும், சவர்க்காரம் மூலம் கைகளை கழுவிக் கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...