இந்த வருடத்தில் ஏற்படவுள்ள பேராபத்து! தப்பித்துக் கொள்ள வழியை கண்டுபிடித்த இலங்கையர்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

2020ஆம் ஆண்டின் இறுதியில் விண்கல் ஒன்று உடைந்து பூமியின் மீது விழும் ஆபத்து உள்ளதாக உலக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எரிசக்தி பயன்படுத்தி அதற்கு முகம் கொடுக்க கூடிய புதிய கண்டுபிடிப்பு ஒன்றை டுபாய் நாட்டில் பொறியியலாளராக செயற்படும் இலங்கையர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த மனதுங்க, ஷேரான் தீப்தி ஜீவகான்த டி சில்வா என்ற 42 வயதுடையவரே இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளார்.

காந்த சக்தி, அணுசக்தி மற்றும் சூரிய சக்தி ஆகிய மூன்று சக்திகளைப் பயன்படுத்தி, பூமியை நோக்கி வரும் விண்களின் பயணப்பாதையை மாற்றுவதற்கான முறையை குறித்த இலங்கையர் கண்டுபிடித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கையர்,

“விண்கல் திடீரென பூமியில் மோதுண்டால் நூற்றுக்கு 10 வீதம் அழிவை ஏற்படுத்தும். அவ்வாறு கடலில் விழுந்தால் சுனாமி நிலைமை ஏற்பட்டு பாரிய அழிவை ஏற்படுத்த கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உதாரணமாக மாலைத்தீவு, இலங்கை போன்ற தீவு நாடுகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாகும். கடலுக்கு அருகில் உள்ள நாடுகளுக்கு பாரிய ஆபத்தை ஏற்பத்தும். பல நாடுகள் கடல் நீரில் மூழ்க கூடும் என பிரித்தானிய விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான ஒன்றிற்கு நாங்கள் ஆயத்தமாக வேண்டும்.

ஏனெனில், விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஒரு தோட்டாவின் வேகத்தில் விண்கல் பூமிக்கு வருகிறது. எனவே அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். முன்பு என்ன நடந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

உலக விஞ்ஞானிகள், விண்கல் மூலம் உலகளாவிய பேரழிவு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். டைனோசர் சகாப்தத்திலிருந்து மனிதர்கள் எவ்வாறு உருவானார்கள், டைனோசர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விகளுக்கு, பூமியில் விழுந்த விண்கற்களே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். டைனோசர்கள் அழிக்கப்பட்டு ஒரு புதிய உலகம் உருவாக்கப்பட்டது என்றும் விஞ்ஞானிகளால் கூறப்படுகிறது.

அதற்கு நாங்கள் ஒரு நடைறை கண்டுபிடிக்க வேண்டும். அதற்காக உலகில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொள்ள கூடிய செயற்பாடு தொடர்பில் தகவல் வெளியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நான் விஞ்ஞானி அல்ல. எனினும் என்னிடம் உள்ள அறிவை கொண்டு பூமியை நோக்கி வரும் விண்கல்லின் திசையை மாற்ற என்னால் முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...