ஐரோப்பிய நாடொன்றில் வாழும் மகளுக்கு இரட்டை குடியுரிமை! குடிவரவு திணைக்களத்தில் சிக்கிய நபர்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இத்தாலியில் குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் இரட்டை குடியுரிமை பெறுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியிலுள்ள மகளின் இரட்டை பிரஜாவுரிமை பெறுவது தொடர்பான அறிக்கை, ஆவணங்களை தயாரித்து தருவதற்கும் அதனை விரைவுபடுத்துவதற்குமாக, அரச முகாமைத்துவ உதவியாளர் ஒருவருக்கு 5000 ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அதற்கமைய குறித்த நபர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினுள் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 20 வருடங்களாக இத்தாலியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குடிவரவு திணைக்களத்திற்குள் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரும், சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகருமமான ஜயந்தா பத்திமினி தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...