மட்டக்களப்பில் விமான தயாரிப்பில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள்! தடுத்து நிறுத்திய புலனாய்வுத் துறை

Report Print Gokulan Gokulan in பாதுகாப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்திற்கு பின் தமிழ் இளைஞர்கள் சிலர் சேர்ந்து சிறிய ரக விமானம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அதனை இலங்கை புலனாய்வு துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சியில் 2013ஆம் ஆண்டு செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் விமான தயாரிப்பு பொறியியல் கற்கை நெறியை மேற்கொண்டு மோட்டார் ரக என்ஜினை பயன்படுத்தி சிறிய ரக விமானம் ஒன்றை தயாரிக்க முனைந்தபோது அதனை இராணுவத்தினர் சுற்றி வளைத்து பிடித்து தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் குறித்த விமான தயாரிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் பல தடவை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளே இந்த விமானத்தை தயாரிப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவதாக கூறி அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞர்களை விசாரணை என்ற போர்வையில் அச்சுறுத்தி நாட்டை விட்டு வெளியேற தூண்டிய அப்போதைய அரசாங்கம் மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விமானம் தயாரிக்கப்பட்டிருந்தால் விடுதலைப் புலிகளுக்கு பின்னர் இலங்கையின் சிறிய ரக விமானத்தை தயாரித்த பெருமை செங்கலடி தமிழ் இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக விமான தயாரிப்பில் ஈடுபட்ட இளைஞர் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இது தொடர்பாக தற்போது புலனாய்வுத் துறையினர் சில இளைஞர்களை தேடிவருவதாக தவகல்கள் வெளியாகியுள்ளதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

Latest Offers