துப்பாக்கி சூட்டில் பெண் பலி - இருவர் படுகாயம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

மொனராகலையில் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிபில, பிட்டகும்புர பிரதேசத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப பிரச்சினை ஒன்று நீண்ட தூரம் சென்றமையினால் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers