ஐரோப்பாவை அச்சுறுத்தும் கொரோனா! பிரான்ஸில் மூவருக்கு பாதிப்பு - இலங்கையில் தீவிர கண்காணிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

உலக அச்சுறுத்தும் ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 41 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவின் பிரதான 10 நகரங்களின் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

சீனாவை அடுத்து மேலும் 9 நாடுகளுக்கு வைரஸ் பரவியுள்ள நிலையில், எந்தவொரு ஆபத்திற்கும் முகம் கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலேயே இந்த வைரஸ் தொற்று முதல் முறையாக பரவ ஆரம்பித்துள்ளது. இதற்கு உரிய முறையில் சிகிச்சை கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாம்பினால் இது தொற்றியிருக்கலாம் என அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது வரையில், வியட்னாம், சிங்கப்பூர், தாய்லாந்து, தாய்வான், தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த கொரனோ வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனாவில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


you may like this..

Latest Offers