இலங்கையிலும் ஆபத்தான கொரோனா வைரஸ்? இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையிலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு பெண்கள் இந்த நோய்க்கான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரில் ஒருவர் சீனா நாட்டை சேர்ந்தவர் எனவும் மற்ற பெண் இலங்கையை சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் இரண்டு பெண்களினதும் இரத்த மாதிரிகள் வைத்திய ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சீன பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நோயாளிகள் தொடர்பிலும் வைத்தியர்கள் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக அங்கொட தேசிய தொற்று நோய் வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...