கொரோனா வைரஸை தடுப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும்! சீன ஜனாதிபதி தெரிவிப்பு

Report Print Malar in பாதுகாப்பு

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும் என சீன நாட்டின் ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு அரசியல் குழுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

புதிய கொரோனா வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. நாடு கொடுமையான சூழலை எதிர்கொண்டிருக்கிறது.

கட்சியின் மத்தியக் குழுவின் அனைத்து தலைமையையும் வலிமைப்படுத்திச் செயற்படுத்துவது அவசியமாகும். அனைவரும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதுடன் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும். இந்தப் போராட்டத்தில் நிச்சயம் வெற்றியடைய முடியும் என அவர் கூறியுள்ளார்.

வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸுக்கு இலக்காகி சீனாவில் இதுவரை 1400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்> 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் இதுவரை 30 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.