பாகிஸ்தானின் கடற்படை தலைமையதிகாரி இலங்கை வருகை

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

பாகிஸ்தானின் கடற்படை தலைமையதிகாரி அட்மிரல் ஸபார் மஹ்முட் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கை கடற்படை தளபதியின் அழைப்பின்பேரில் அவர் இலங்கை வந்துள்ளார்.

ஐந்து நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள அவர் இலங்கையின் கடற்படை தளபதி, விமானப் படை மற்றும் இராணுவத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட்டவர்களை சந்திக்கவுள்ளார்.

மரியாதை நிமித்தமாக அவர் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைதவிர பாகிஸ்தானிய கடற்படை அதிகாரி இலங்கையில் கடற்படையினரின் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.

இதன்பின்னர் அவர் ஜனவரி 29ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.