கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் புதிய தடை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்பவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக விமான சேவை தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, வெளிநாடு செல்லும் மற்றும் வரும் பயணிகளைத் தவிர உறவினர்கள் அனைவரும் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை 6 மணி முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என அவர் அறிவித்துள்ளார்.

பயணிகளை தவிர மற்றவர்கள் அனைவரும் தற்காலிக நடவடிக்கையாக விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என விமான நிலைய தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்ட நோயாளி அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த தடை அமுலாகிறது.