இலங்கை வரும் பயணிகளுக்கான உள்நுழையும் விசா தடை! உடன் அமுல்படுத்துமாறு உத்தரவு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

சீனாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வருகை விசா தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சற்று முன்னர் இந்த அறிப்பை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த விசா நடைமுறையை தடை செய்யுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அறிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளான பெண்ணொருவர் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனையடுத்து இலங்கையில் நோய்த் தொற்று ஏற்படாத வகையில் பல்வேறு பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.