கொரோனா வைரஸ்சிலிருந்து இலங்கையர்கள் தப்பித்துக் கொள்வது எப்படி?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பெண்ணொருவர் உள்ளான நிலையில் நாட்டு மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் இது குறித்து எவரும் அச்சப்பட வேண்டாம் என சுகாதார அமைச்சு மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய்த் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களின் அருகிலிருந்தால் மாத்திரமே வைரஸ் பரவுவதற்கான சாத்தியமுள்ளது. அருகிலிருந்து உரையாடுவதையோ, சன நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும். சனநெரிசல் மிக்க பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.

கொரோனா வைரஸினால் சீன பிரஜை ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை பிரஜை எவரும் இதனால் பாதிக்கப்படவில்லை. இதனால் கொரோனா வைரஸ் நாட்டில் அதிகளவில் பரவுவதற்கான சாத்தியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.


you may like this video