வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவிப்பு!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

வௌிநாட்டிலிருந்து இலங்கை வருகை தருபவர்கள் தமது தகவல்கள் வௌிப்படுத்தும் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்புதல் கட்டாயம் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதனூடாக, சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் காலம், அவர்கள் பயணிக்கவுள்ள பகுதிகள் மற்றும் தங்கும் ஹோட்டல்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு நான்கு பக்கங்களை கொண்ட சுற்றுநிருபம் ஒன்றை வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.