இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் சென்ற இடங்கள் தொடர்பான தகவல்கள்!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட சீன பெண் தங்கியிருந்த இடங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 19ஆம் திகதி இலங்கைக்கு வந்த குறித்த பெண், அன்றைய தினம் Gateway Airport Garden ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து சீகிரியா சென்றவர் அன்றைய தினம் இரவு சீகிரியாவில் உள்ள Sigiriya Jungles ஹோட்டலில் இரவு உணவு பெற்றுக் கொண்டுள்ளார்.

21ஆம் திகதி சீகிரியாவில் இருந்து அவர் கண்டி சென்றுள்ளார். அங்கு Isiwara Garden ஹோட்டலில் பகல் உணவும் அமாயா ஹிஸ்ல் ஹோட்டலில் இரவு உணவு பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர் அதே ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

22ஆம் திகதி கண்டியில் இருந்து நுவரெலியா சென்றவர், கண்டியில் உள்ள Oak Ray ஹோட்டலில் பகல் உணவு பெற்றுள்ளார். பின்னர் நுவரெலியாவில் உள்ள அரலிய ஹோட்டலில் இரவு உணவு பெற்றுக் கொண்டுள்ளார்.

23ஆம் திகதி அதே ஹோட்டலில் காலை உணவு பெற்றவர் கிழக்கு மாகாணத்தை நோக்கி சென்றுள்ளார்.

அன்று பிற்பகல் Blue Field Alloy ஹோட்டலில் பகல் உணவு பெற்றுள்ளார். அன்றைய தினம் இரவு RIU Ahungalla-AI ஹோட்டலில் உணவு பெற்றுக் கொண்டுள்ளார்.

24ஆம் திகதி Ramprt ஹோட்டலில் பிற்பகல் உணவு பெற்றுக் கொண்ட சீன பெண் இரவு RIU Ahungalla ஹோட்டலில் இரவு உணவு பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குழுவினருடன் இலங்கை வந்திருந்தவர், நேற்று அந்த குழுவினருடன் சீனா நோக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போதே அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை குறித்த பெண் பயணித்த பகுதிகளிலுள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படியும், நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.