வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பொதிகளால் கொரோனா வைரஸ் ஆபத்தா?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
#

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களின் பொதிகள் ஊடாக கொரோனா வைரஸ் பரவ கூடும் என இலங்கை மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் நிலவுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொருட்கள் ஊடாக இந்த நோய் தொற்று பரவும் ஆபத்து மிகவும் குறைந்த அளவே உள்ள அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் வெளிநாட்டு பொதிகள் குறித்து அச்சமடைய வேண்டாம் என இலங்கையர்களிடம் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

சத்தான உணவைப் பெறுதல், நன்கு நீர் அருந்துதல், ஓய்வாக இருத்தல், சிறந்த ஆரோக்கியத்தை பேணல் போன்ற விடயங்கள் ஊடாக இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


you may like this video