இலங்கையில் மற்றுமொரு சீனப் பெண் வைத்தியசாலையில் அனுமதி - கொரோனா வைரஸ் என சந்தேகம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பில் தங்கியிருந்த நிலையில் காலிக்கு சென்ற சீனப் பெண் பிரஜை ஒருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 19 வயதான சீன பெண் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வந்துள்ளார். கொழும்பில் இருந்து காலிக்கு சென்ற சந்தர்ப்பத்தில் நோய்வாய்ப்பட்ட குறித்த பெண் இவ்வாறு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றியதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்களை அனுமதிக்கும் வாட்டில் குறித்த சீனப் பெண் அனுமதிக்கப்பட்டள்ளார்.

அவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்வதற்காக அவரது இரத்த மாதிரி கொழும்பு வைத்திய ஆய்வு நிலையத்திற்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சீனப் பெண்ணொருவர் அங்கொட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...