சவளக்கடை பொலிஸ் நிலைய புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை

Report Print Varunan in பாதுகாப்பு

அம்பாறை சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர் தலைமையில் இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்னாயக்க கலந்து கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடைகள், விடுதிகள், அலுவலகங்கள்,வாகனங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸ் நிலையத்திலுள்ள வாகனங்களின் நிலையையும் பரிசோதனை மேற்கொண்டார்.


Latest Offers

loading...