இரசாயன ஆயுத தாக்குதல்களின் பின்னணியில் அமெரிக்கா?

Report Print Niraj David Niraj David in பாதுகாப்பு

1980ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ம் திகதி, ஈரான் மீதான முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பித்தது ஈராக்.

மனித அலைகளாகச் சென்ற ஈராக் படைகள் மிகப் பெரிய அனர்த்தத்தை ஈரானில் விளைவித்தன. இரசாயன ஆயுதங்களின் பாவனை உலகத்தின் ஆச்சரிய கண்களை விரிக்க வைத்தன.

உலக வல்லரசுகளது எண்ணெய் வியாபாரத்தின் வெறிபிடித்த அவா, அந்த வளைகுடா யுத்தத்தின் அத்தனை அத்தியாயங்களிலும் பிரதிபலித்துக் கொண்டே இருந்தது.

ஈரான் - ஈராக் யுத்த காலத்தில் ஈரான் படையினர் மீதும், அப்பாவிப் பொதுமக்கள் மீதும், குர்தீஸ் இனத்தவர் மீதும் ஈராக் இரசாயனத் தாக்குதலை மேற்கொண்டதான குற்றச்சாட்டுக்கள் பரவலாக சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வந்தன.

பொதுமக்கள் மீது இரசாயன குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட 30 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

எல்லைக் கிராமங்களில் உள்ள வைத்தியசாலைகள் மீதும் ஈராக் படையினர் இரசாயன குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.

ஈராக் மேற்கொண்ட நச்சுவாயுத் தாக்குதல்கள் காரணமாக சுமார் 20,000 ஈரான் படையினர் கொல்லப்பட்டதாக ஈராக் அரசாங்கம் அறிவித்திருந்தது.

சுமார் 80,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். 1986ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை, இரசாயன ஆயுதங்கள், நஞ்சு வாயுத் தாக்குதல்கள் மூலம் நடாத்தப்பட்ட Anfal genocide என்ற குர்திஸ் மக்கள் மீதான சதாம் ஹுசைனின் இன அழிப்பு நடவடிக்கையின்போது 50000 முதல் 182,000 குர்திஸ் மக்கள் ஈராக் படைகளால் கொல்லப்பட்டார்கள்.

உலகம் முழுவதும் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியிருந்த ஈராக் படைகளின் அந்த இரசாயன தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், அமெரிக்கா அந்தத் தாக்குதல்களுக்குத் தேவையான இரசாயன மூலப் பொருட்களை ஈராக்கிற்கு வழங்கியிருந்ததான குற்றச்சாட்டுக்கள் தற்பொழுது வெளியாகி வருகின்றன.

அந்த விடயங்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: