இலங்கை மாணவர்களை அழைத்து வர சீனா புறப்பட்ட விமானம்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

கொரோனா வைரஸ் அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ள சீனாவின் வுஹான் மாகாணத்துக்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விசேட விமானம் ஒன்று இன்று மாலை புறப்பட்டு சென்றுள்ளது.

வுஹான் மாகாணத்தில் தங்கியிருக்கும் இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்கு இந்த விமானம் அங்கு சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

வுஹான் மாகாணத்தில் சுமார் 33 இலங்கை மாணவர்களும் அவர்களின் உறவினர்களும் தங்கியுள்ளனர்.

இவர்களை இலங்கைக்கு அழைத்து வர கோரி நேற்று அவர்களின் உறவினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதேவேளை சீன வெளியுறவு அமைச்சும் வுஹனில் தரை இறங்குவதற்கு அனுமதியை நேற்று வழங்கியது.