இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த துணையிருப்பதாக பாக்கிஸ்தான் அறிவிப்பு

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

இலங்கையில் பயங்கரவாதம், போதைவஸ்து மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தாம் எப்போதும் துணையிருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் மஹ்முட் சாட் கட்டாக் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்னவை அண்மையில் சந்தித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானும் இலங்கையும் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வதில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன.

அதேபோன்று போதைவஸ்து தடுப்பு நடவடிக்கைகளிலும் இணைந்து செயற்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்ற வேளையிலும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு வந்தமையை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இதன்போது கருத்துரைத்த மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன இலங்கைக்கு பாகிஸ்தான் நல்கிவரும் உதவிகளுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.