கொரோனா வைரஸிடமிருந்து மக்களை பாதுகாக்க ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களை குணப்படுத்துவதற்காக மேற்கத்திய மற்றும் சுதேச மருத்துவத் துறையில் நிபுணர்களை அழைத்து வந்து தகவல் பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ள சீனப் பெண்ணின் உடல்நிலை தற்போது தேறி வருகிறது.

இந்த தொற்று நாட்டினுள் பரவுவதனை தடுப்பதற்காக வைத்தியர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

முழுமையான அர்ப்பனிப்புடன் ஆதரவு வழங்கிய அனைத்து துறையினருக்கும் ஜனாதிபதி தனது பாராட்டினை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மக்களை பாதுகாப்பதற்கு, இந்த நடவடிக்கையை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.


you may like this video