பொதியிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த டைனமைட் வெடிபொருட்கள் மீட்பு

Report Print Ashik in பாதுகாப்பு

மன்னார், சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 'டைனமைட்' வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வெடிபொருட்கள் நேற்று மாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த கடற்கரை பகுதியில் விசேட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போதே டைனமைட் வெடிபொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

வெடிபொருட்கள் பொலித்தின் பையில் பொதியிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.

எனினும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.