வவுனியாவில் வெடிக்கும் நிலையில் காணப்பட்ட கைக்குண்டொன்று மீட்பு

Report Print Theesan in பாதுகாப்பு

வவுனியா - குடாகச்சக்கொடிய பகுதியில் வெடிக்கும் நிலையில் காணப்பட்ட கைக்குண்டொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

குடாகச்சக்கொடிய கிராமத்தில் சஜித் பிரேமதாசவால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையிலேயே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் விஷேட அதிரடிப் படையினரின் உதவியுடன் நீதிமன்ற உத்தரவு பெற்று கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர்.

Latest Offers

loading...