அதிகளவான சீனப் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு இழுக்க அறிமுகமாகும் புதிய செயலி

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கைக்கு வரும் சீன நாட்டவர்களின் உடல் நிலையை கண்காணிக்க புதிய கையடக்க தொலைபேசி app எனப்படும் செயலி ஒன்றை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.

அதற்கமைய இலங்கைலுள்ள மற்றும் நாட்டுக்கு வரும் சீன பயணிகளின் உடல் நிலையை ஆராய்ந்து அவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு பொது சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவாக இலங்கைக்கு தினசரி 800 முதல் 1200 சீன சுற்றுலா பயணிகள் வருகைத்தந்தனர், எனினும் கொரோனா அச்சத்தை அடுத்து இலங்கை வரும் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 10 - 15 வரை குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் அறிமுகமாகியுள்ள இந்த செயலி ஊடாக கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய இலங்கை வரும் சீன சுற்றுலா பயணிகள் தங்கள் கையடக்க தொலைபேசி இலக்கங்களை அந்த appஇல் பதிவிட வேண்டும். குறித்த சீன பயணிகள் செல்லும் இடங்களையும் அவர்களின் உடல்நிலை குறித்தும் சோதிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் பயணி ஒருவர் சுகயீனமடைந்தால் இந்த app மூலம் அவருக்கான வைத்திய உதவிகளை மேற்கொள்ள முடியும் அத்துடன் அருகில் உள்ள மருத்துவமனை தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் சீன பயணிகள் தாங்களாகவே மருத்துவ உதவிகயை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.