கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பு வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாத்திரமின்றி வவுனியா, புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

இந்த நிலைமையை உணரும் நபர்கள் பாதிப்புகள் ஏற்படும் நிலைமை அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை மேலும் 2 - 3 நாட்களுக்கு நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கொழும்பு வாழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தூசு துகள்களின் அதிகரிப்பு காரணமாக இருமல், தடுமல், சளி போன்ற நோய் நிலைமைகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...