படைகளில் இருந்து உரிய முறையில் வெளியேறாத 7366 பேர் கடந்த 11ஆம் திகதி வரை படையணிகளில் பிரசன்னம்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

படைகளில் இருந்து உரிய முறையில் வெளியேறாத 7366 பேர் 2020 பெப்ரவரி 11ஆம் திகதி வரையில் தமது படையணிகளில் பிரசன்னமானதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் படையதிகாரிகள் 20 பேரும் அடங்குகின்றனர்.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒருவார காலத்துக்கு படைகளில் இருந்து உரிய முறையில் விலகிச் செல்லாதவர்களுக்கு பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த காலத்துக்குள் வந்து மீண்டும் சேவையை ஆரம்பிக்கலாம். அல்லது சட்டரீதியாக சேவையில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய 5458 இராணுவத்தினர், 773 கடற்படையினர், 13 அதிகாரிகள் உட்பட்ட 1135 விமானப்படையினர் ஆகியோர் தமது படைகளில் பிரசன்னமாகியுள்ளதாக தெரியவருகிறது.

Latest Offers