சிறைச்சாலை கைதிகளுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

சிறைச்சாலை கைதிகளுக்கு விசேட தொழில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. அவர்களின தண்டனைக் காலம் நிறைவடைந்து விடுதலையானதும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பாக எவன்காட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஷ்ஷங்க சேனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட வசதிகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதிகளுக்கு முறையான பொறிமுறையின் கீழ் பயிற்சி அளிப்பது சமூகத்து பாதுகாப்பானது என எவன்காட் தலைவர் மேஜர் நிஷ்ஷங்க சேனாதிபதி தெரிவித்துளளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.