புனர்வாழ்வு ஆணையாளராக மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தமது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
நேற்று அவர் இந்த பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
ஏற்கனவே அவர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பயங்கரவாத மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு உட்பட்ட பல்வேறு பிரிவுகளின் தலைவராக கடமைகளில் ஈடுபட்டிருந்தார்.
2012 - 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் புனர்வாழ்வு ஆணையாளராக கடமையாற்றியிருந்தார்.
இவரின் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.