இலங்கையில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றா? வைத்தியர்கள் தீவிர நடவடிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைரஸ் தொற்று நாட்டில் பரவாமல் தடுப்பதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கான ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையினுள் நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் அதே நேரத்தில், நாங்கள் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்" என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான மீளாய்வு கூட்டம் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையங்கள் மற்றும் விமான போக்குவரத்து அதிகாரசபையுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிற குறியீட்டு சுகாதார அறிவிப்பு படிவத்தை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான நிற குறியீட்டு படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் நடந்து செல்லும்போது இந்த நோய் தொற்று இருந்தால் கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகளுக்கு எளிதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கொரோனா தொற்றியிருப்பதாக சந்தேகிக்கப்படும் 8 பேர் சிகிசிக்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, ஜனவரி மாதம் 27ஆம் திகதி இலங்கையில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட சீன பெண் குணமடைந்து சீனாவுக்குப் புறப்படுவதற்குக் காத்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.


you may like this video