சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 30 ஆயிரம் பேர் பலியா? வெளியான அதிர்ச்சித் தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாசா நிறுவனத்தை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள வுஹான் மாகாணத்தில் நாளாந்தம் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை எரியூட்டி அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், இதன் காரணமாக வுஹான் மாகாணத்தில் சல்பர் டைஒக்சைட் எனும் (SO2) வாயு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மனித உடலை எரியூட்டும் போது வெளிப்படும் சல்பர் டைஒக்சைட் எனும் (SO2) வாயு வெளிப்படும். இந்த வாயுவின் அளவு வூஹான் மாகாணத்தில் மட்டும் 1700ug/m^3 அளவில் பதிவாகியுள்ளதாக நாஸா நிறுவனத்தை மேற்கோள்காடடி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதாரணமாக 80ug/m^3 அளவில் இருக்க வேண்டிய சல்பர் ஒக்சைட் அங்கு 1700ug/m^3 அளவில் இருப்பதனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்து எரியூட்டப்படும் உடல்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட சடலங்களை எரியூட்டும் நிலையங்கள் 8 உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் தகவல் தருகையில், ஒவ்வொரு நாளும் தகனம் செய்ய வேண்டிய உடல்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகம் என்று கூறுகிறார்.

வூஹான் எரியூட்டும் இல்ல ஊழியரின் கணக்கின் அடிப்படையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் உடல்களின் எண்ணிக்கை ஜனவரி 22 முதல் வூஹான் எரியூட்டும் இல்லத்தில் 225 முதல் 4,725 உடல்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எரியூட்டும் இல்ல ஊழியரின் கணக்கு உண்மையாக இருந்தால், இதன் பொருள் நகரத்தில் ஒரு நாளைக்கு 1,628 இறப்புகளும், கடந்த 21 நாட்களில் 34,200 பேரும் இறந்துள்ளனர்.

உயிரிழப்பின் எண்ணிக்கையை சீன அரசு பெருமளவில் மறைத்து வருவதாக உலகளவில் குற்றஞ்சாட்டப்பட்டு வருவதுடன் இது தொடர்பான பல்வேறு காணொளிகளும் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.