கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பெண்கள் உட்பட நால்வர் கைது!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 3 பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓமானில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 43 வயதுடைய கிரிபத்கொட பிரதேசத்தை பெண்ணும், 38 மற்றும் 24 வயதுடைய குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த பெண்கள் இருவரும் 24 வயதுடைய பேருவளை பிரதேசத்தை சேர்ந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 24 வயதுடைய குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த பெண் இதற்கு முன்னர் இவ்வாறு சிகரெட் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரியிடம் சிக்கியவர் என குறிப்பிடப்படுகின்றது.

அவர்கள் நேற்று அதிகாலை ஓமானில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் கொண்டுவந்த சிகரெட்டின் பெறுமதி 52,47,800 ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது. இந்த சிகரெட் தொகை அரசுடமையாக்கப்பட்டதோடு சந்தேக நபர்கள் நால்வரையும் 15 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.