அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் : நாளுக்கு நாள் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வு

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

கடந்த சில தினங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸினால் மரணமானதை அடுத்து உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 1770 ஆக உயர்ந்துள்ளது.

இதில் சீனாவின் ஹூபாய் மாகாணத்தில் மாத்திரம் 1696 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வரை இந்த தொற்றுக்காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,182 ஐ எட்டியுள்ளது.

இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் கடந்த தினங்களைவிட பாதிக்கப்பட்டவர்களின் அதிகரிப்பு வீதம் 5 ஆக இருந்தது. எனினும் மரணமானவர்களின் எண்ணிக்கை 139இல் இருந்து குறைந்துள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் மாத்திரம் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 வீதமாக இருந்தது.

ஹூபாய் மாகாணத்தின் சுகாதார அதிகாரிகள் அந்த மாகாணத்தின் பொதுமக்களை தொடர்ந்தும் கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறு கேட்டுள்ளனர். இதேவேளை சீனாவுக்கு வெளியில் இந்த தொற்றினால் 5 பேர் பலியாகியுள்ளனர்.