வெளிநாடு ஒன்றில் கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் சிக்கியுள்ள இலங்கையர்கள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஜப்பானில் உள்ள யெபகொஹாமா துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள டயமன்ட் பிரன்சன் கப்பலில் இலங்கையர்கள் இருவர் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அந்த கப்பலில் உள்ள பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அதில் இரண்டு இலங்கையர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இலங்கையர்கள் அந்த கப்பலின் ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவர்கள் நல்ல உடல் நிலையிலேயே இருப்பதாக ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்த கப்பலில் உள்ள பயணிகளுக்கு மாத்திரம் தங்களின் நாடுகளுக்கு செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தூதுவர் சந்தன வீரசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த கப்பலில் தங்கியிருந்த அமெரிக்கர்கள் 400 பேர் இன்று ஜப்பானிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் கலிபோர்னியாவிலுள்ள விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.