கொரோனா வைரஸ் அச்சம்! ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் தீவிர பாதுகாப்பு

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஹம்பாந்தோட்ட சர்வதேச துறைமுகத்தில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

இதன்படி நோய் தொற்று ஏற்படுவதற்கு முன்னர் சீனாவுக்கு சென்று அங்கிருந்து புதிதாக வரும் பணியாளர்களையும், குடும்பங்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சீன புதுவருடத்துக்காக சென்ற பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கொரோனவைரஸ் அச்சம் நீங்கும் வரை இலங்கைக்கு வரவேண்டாம் என்று இலங்கை மற்றும் சீன அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இதனைதவிர துறைமுகத்தில் தொடர்ந்தும் பரிசோதனைகள் உட்பட சுத்தப்படுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

துறைமுகத்துக்கான சுற்றுலா தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத விருந்தினர்களுக்கு முகக்கவசங்கள் அணிவிக்கப்படுகின்றன.