கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 பேர் திடீர் கைது

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு சில தரப்பினர் தொடர்ந்தும் சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துபவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்கானித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வாரங்களில் பயணிகளுக்கு அழுத்தம் பிரயோகித்த 60 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை 4 பேரும் நேற்றைய தினம் இரண்டு பேரும் அடங்கலாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


You may like this Video...