தீவிரமடையும் கொரோனா வைரஸ்! குணமடைந்தவர்கள் மீண்டும் பாதிப்பு - பாரிய நெருக்கடியில் வைத்தியர்கள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் நோய் தொற்றினை உறுதிப்படுத்துவதற்கு 14 நாட்களுக்கு அதிக காலம் செல்லும் என வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

சீனாவில் 70 வயதான நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் ஹுபே பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதனை உறுதி செய்வதற்கு 27 நாட்களாகியுள்ளது.

கொரோனாவில் பாதிக்கப்பட்டவர் 14 நாட்களுக்கு அடையாளம் காணப்படுவார் என இதற்கு வைத்தியர்கள் தெரிவித்த போதிலும் தற்போது 14 நாட்கள் போதுமானதல்ல என வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குணமடைந்து வீடு திரும்பியவர்களை மீண்டும் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குணமடைந்தவர்களில் பலரை சில நாட்களின் பின்னர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக உறுதியாகியுள்ளது.

இது மிகவும் இக்கட்டான சூழ்நிலையாக மாறியுள்ளதாாக ஹுபேய் பிராந்தியத்தில் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளும் பிரதான வைத்தியர் Zhao Jianping தெரிவித்துள்ளார்.

குணமடைந்த நோயாளிகளை வீட்டிற்கு அனுப்பாமல் அவர்களை தடுத்து வைப்பதென்பது பாரிய சிக்கலான நிலைமையாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.