சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற இருவருக்கு பிணை

Report Print Kumar in பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களில் இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு இன்று அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களில் இருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வாரியபொல பிரதேசத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 3 பேரும் , விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 61 பேருடன் சேர்த்து 64 பேர் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை மேற்கொண்ட அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏனைய 59 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் இருவர் கொழும்பில் தடுப்புக்காவலில் வைக்கபட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏனையவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது இருவர் சரீரப்பிணையிலும் 25000ரூபாய் ரொக்கப்பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 59 பேரையும் எதிர்வரும் 10ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட குறித்த பெண் சாய்ந்தமருதில் 26.4.2019 அன்று இடம் பெற்ற வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்த சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் முகம்மது நியாஸ் என்பவரின் மனைவி என தெரிய வருகின்றது.

இவர்களின் பிணை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை ஏப்ரல் மாதம் 28ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் - வருணன்

Latest Offers

loading...