கொழும்பு வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்! இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
1408Shares

கொழும்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் இராணுவத்தினருக்கு மேலதிகமாக விமானப்படையினரை இணைத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நடவடிக்கைக்காக 150 இற்கும் அதிகமான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொட, வெள்ளவத்தை, நாடாளுமன்ற சுற்றுவட்ட வீதி உட்பட பல வீதிகளில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் சிலரும் இதற்காக ஈடுபடுப்பபட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களிலும் மேலும் முப்படையை சேர்ந்த பலர் கடமையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இராணுவ சைக்கிள் குழுவினர் கொழும்பின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்களின் நாளாந்த செயற்பாடகள் பாதிக்கப்படுவதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் காலை நேரங்களில் அலுவலகம் செல்பவர்களும், பாடசாலை செல்பவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகுவதாகவும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

போக்குவரத்து நெரிசலின் போது வெளியேறும் வாகன புகை காரணமாக பொது மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றினை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.