கட்டுநாயக்க விமான நிலையம் வரும் பயணிகளுக்கு விசேட சோதனை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வரும் பயணிகள் விசேட சோதனைக்குட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் தென் கொரியாவில் பரவி வருகின்றதன் காரணமாக அந் நாட்டில் இருந்து இலங்கை வரும் பயணிகள் தொடர்பில் இலங்கை சுகாதார பிரிவு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர்.

48 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது வரையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,771 ஆக அதிகரித்துள்ளது.

தென்கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா 12 மரணங்கள் பதிவாகியுள்ளன. ஈரானில் 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...