கொழும்பில் புதையலில் சிக்கிய தங்க சிலைகள்!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பு, புறக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து தங்க சிலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் புராதன தங்க புத்தர் சிலைகளுடன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் ஒன்றில் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் 18 அங்குல உயரமும் 11.805 கிலோ எடையும் கொண்ட தங்க புத்தர் சிலை ஒன்றும், இரண்டு அங்குலமும் 152 கிராம் நிறையும் கொண்ட மஞ்சள் நிறத்திலான தங்க புத்தர் சிலை ஒன்றும் சந்தேக நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 80 வயதுடைய, மொனராகலை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Latest Offers

loading...