கொரோனா நோயாளிகளுடன் சிக்கிய இலங்கையர்கள்! பாதுகாப்பாக மீட்ட இந்தியா

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஜப்பானில் நங்கூரமிடப்பட்டிருந்த டயமன்ட் பிரின்ஸ் சுற்றுலா பயணிகள் கப்பலில் சிக்கியிருந்த இலங்கைகள் இருவரை அழைத்து செல்வதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் பரவியமையினால் இந்த கப்பலை ஜப்பானில் நங்கூரமிடுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டது.

14 நாள் கண்கானிப்பு நடவடிக்கையின் பின்னர் கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளாகாதவர்களை தங்கள் நாடுகளுக்கு அழைத்து செல்ல அமெரிக்கா உட்பட பல நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டன.

அதற்கமைய கப்பலில் இருந்த இலங்கையர்கள் இருவரும், இந்திய நாட்டவர்கள் 119 பேரும், நேபாளம், தென்கொரியா மற்றும் பேரு நாட்டவர்களையும் இந்திய அதிகாரிகள் தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.